
நடிகர் விஷால் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவ முகாமை விஷால் துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசும்போது, “நடிகர் சங்கத்தை பற்றி குறைக் கூறுபவர்கள் ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும். பழைய முறைகேடுகள் பற்றிய எல்லா தகவல்களையும் இன்னும் 10 நாட்களில் நாங்கள் வெளியிடுவோம். நாங்கள் இன்னும் நடிகர் சங்கக் கட்டிடத்துக்கான டெண்டரை விடவில்லை. எங்களுக்கு இன்னும் சி.எம்.டி.ஏ அப்ரூவல் வரவில்லை. உறுப்பினர் வாராஹி சொல்வதில் உண்மை இல்லை.” என்றார்.
மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைவேற்றிருக்கும் தீர்மானம் குறித்து கேட்டபோது, “அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதாக எனக்கு எந்தவொரு கடிதமும் வரவில்லை. நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார் விஷால்


