சோனியாகாந்தி புத்தகத்தில் வைகோ பற்றி விமர்சனம் – சர்ச்சை

காங்கிரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,‘பிலாங்கிங்:எ ஜர்னி ஆப் லவ்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் நவம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. இப்புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லி ஐடிசி மவுரியா நட்சத்திர விடுதியில் நவம்பர் 16 அன்று நடந்தது.இதில்,சோனியா காந்தி,அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தி,மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டனர்.இப்புத்தகத்தை ஹார்பர்காலின்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில்,இராஜிவ் காந்தி படுகொலை விவகாரத்தில் திமுக முக்கிய தலைவர் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இருந்ததாகவும்,இராஜிவ் காந்திக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்ததாகவும் சோனியா காந்தி பதிவு செய்திருக்கிறார்.சோனியா குறிப்பிட்டுள்ள 1991 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வைகோ திமுகவில் முக்கியத் தலைவராக இருந்தார்.1994 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவைத் தொடங்கினார்.எனவே, திமுகவின் அப்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்த சோனியாவின் விமர்சனம்,அக்கட்சியில் அப்போது இருந்த வைகோவின் அரசியல் காலகட்டத்தையும் மீண்டும் விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இப்போது வைகோ,காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கிறார்.எனவே,வைகோவோ அவரது கட்சியினரோ இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதேநேரம்,தமிழ்த்தேசியர்கள் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.உங்கள் தேவைக்காக,ஆட்சியதிகாரத்திற்காக வைகோவின் உழைப்பு,பேச்சு எல்லாம் தேவைப்படுகிறது.அப்போதெல்லாம் அவர் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என்பது தெரியவில்லையா? என்கிற கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்.

Leave a Response