
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இந்நாள் அரசியல் குறித்து வைத்துள்ள விமர்சனங்கள்…
சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் விசிக,சிபிஐ,சிபிஎம்,ஐயுஎம்எல் ஆகிய கட்சித் தலைவர்களையும் மற்றும் அதிமுகவில் ஒரு பிரிவு தலைவர் இல்லத்திற்கும் சென்று கெஞ்சிக் கூத்தாடி ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தவர்தான் தற்போதைய முதல்வர் விஜய்.
ஆனால்,இதில் காங்கிரசின் மூத்ததலைவர் இராகுல்காந்தியையோ,தமிழ்நாடு கங்கிரசு தலைவரையோ நேரில் சந்தித்து ஆதரவு கேட்காத தற்குறி தவெகவுக்கு,மானம் மரியாதை இழந்து முதலில் ஓடிச்சென்று ஆதரவு கொடுத்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவமானம் போதாது என்று,அடுத்த பிரதமர் விஜய்தான் என்று அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்தில் பேசியபோது சட்டமன்ற மேசையைத் தட்டி வரவேற்கும் காங்கிரசு உறுப்பினர்களின் நிலையைப் பார்த்து இந்த நாடே வெட்கித் தலைகுனிகிறது.
அமைச்சர் பதவி ஒன்றை வாங்கியதால் 100 நாட்களில் 12 ஆணவக் கொலைகள் நடந்த பின்பும் மூச்சுவிடாமல் கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது விடுதலைச் சிறுத்தைகள்.அதேபோல ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த ஒரே காரணத்திற்காக அத்தனை கம்யூனிஸ்ட் மாணவர்கள்,இளைஞர்களின் விலாசத்தையும் கண்டறிந்து அரசியல் வாழ்வை முடிப்பதற்கு தலைமைச்செயலாளர் மூலம் நடவடிக்கை எடுத்த தவெக ஆட்சியை தூக்கிச் சுமக்கும் இடதுசாரிகளைப் பார்க்கும்போது வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.
இந்திய துணைக்கண்டத்தில் எல்லாக் காலத்திலும் இஸ்லாமியர்களுக்கு துணை நின்ற திமுகவை விட்டு விலகி திடீர் தலைவர் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்ததால் பக்ரீத் அன்று ஆடு,மாடு,ஒட்டகம் கூட வெட்ட முடியாமல் வெட்கித் தவித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிலைமை இன்னும் பரிதாபம்..
தற்போது காக்ரோச் ஜனதா பார்ட்டி ஜென்சி இளைஞர்களிடம் ஒரு கேபினட் அமைச்சரை இழந்த பிரதமர் மோடி, அச்சத்தில் காக்ரோச்க்கு எதிராக விஜயோடு இணைந்து வட இந்தியா முழுவதும் “Vijay Dalapathi” என்ற “Fake Reels” பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்தி மொழியில் தயாரித்து காக்ரோச்க்கும்,இராகுல்காந்திக்கும் எதிராக இந்தியா முழுவதும் பரப்புவதோடு அடுத்த “பிரதமர் யார்” என்ற போலியான சர்வே மூலம் விஜய் 3 ஆவது இடத்திலும்,காக்ரோச் 4 ஆவது இடத்திலும் இருப்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருவது நாடறிந்ததே.. இந்தநிலையில் விஜய் ஆட்சியைத் தூக்கிச் சுமக்கும் பெயரில்லாக் கூட்டணிக் கட்சியினர் இந்தக் கொடுமையை அறிவார்களா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


