செந்தில்பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டும் விஜய் அரசு

விஜய் ஆட்சி மீது,சட்​டப்​பேர​வை​யில் நம்​பிக்கை இல்​லாத் தீர்​மானம் கொண்டு வரும்​போது,அரசுக்கு எதி​ராக
வாக்​களித்​தால் ரூ.35 கோடி தரு​வ​தாக திமுக​வினர் தன்​னிடம் பேரம் பேசி​ய​தாக ஊத்​தங்​கரை தொகுதி தவெக சமஉ இளை​ய​ராஜா,சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் புகார் கொடுத்​தார்.ஆட்சியைக் கவிழ்க்க
பெருநிறு​வனம் மூலம் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்​கப்​பட்​ட​தாக​வும் அதிர்ச்சித் தகவல்​கள் வெளி​யாகின.

இதுகுறித்து சென்னை திரு​வல்​லிக்​கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்​து, யூ-டியூபர் திரு​நாவுக்​கரசு உட்பட 9 பேரை கைது செய்​தனர்.அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில்,ஆட்​சிக்கவிழ்ப்பு சதித்திட்​டத்​தின்
பின்​னணி​யில் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது தம்பி அசோக்​கு​மார் இருப்​பதாக காவல்துறையினர் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து,இந்த வழக்​கில் அவர்​களும் முக்​கிய குற்​ற​வாளி​களாக சேர்க்​கப்​பட்​டனர்.கரூர் மாவட்​டம்
இராமேசு​வரப்​பட்​டி​யில் உள்ள அவர்​களது பூர்​வீக இல்​லத்​தில்,தந்தை வேலுச்​சாமி​யிடம் காவல்துறையினர் அழைப்பாணை வழங்​கினர்.

அதன்படி,திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் நேற்று (ஜூலை 6) காலை 10.30 மணிக்கு இரு​வரும் ஆஜராக வேண்​டும் என்று உத்​தர​விடப்​பட்​டிருந்​தது.ஆனால்,அவர்​கள் இரு​வரும் நேற்று ஆஜராக​வில்​லை.
அவர்​களது கைபேசி​கள் அணைத்து வைக்கப்​பட்​டிருந்​தன.அவர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர்​களும் வரவில்​லை.

இதையடுத்​து, இரு​வருக்​கும் மீண்​டும் அழைப்பாணை அனுப்​பலாமா? அல்​லது வேறு சட்டநடவடிக்​கைகளை
மேற்​கொள்​ளலாமா? என்று ஆலோ​சித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, இரு​வரும் வெளி​நாடு​களுக்​குச் செல்​வதை தடுக்க ஏற்​கெனவே அனைத்து விமான
நிலை​யங்​களுக்​கும்‘லுக்​-அவுட்’ அறிவிக்கை அனுப்​பி​யுள்​ளனர்.அதோடு,கடந்த 6 நாட்​களாக கரூரில் முகாமிட்​டுள்ள சென்னை தனிப்​படை காவல்துறையினர், தற்​போது தேடு​தல் வேட்​டையைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

சென்​னை,திருச்​சி,கோவை மட்​டுமின்​றி, அண்டைமாநிலங்​களான கேரளா,ஆந்​தி​ரா,தெலங்​கா​னா,கர்​நாட​கா,
புதுச்​சேரி​யிலும் சந்​தேகப்​படும் இடங்​களில் தனிப்​படை​யினர் தேடி வரு​கின்​றனர்.

இதனால்,இரு​வரும் எந்த நேரத்​தி​லும் கைதாகலாம் என்ற நிலை ஏற்​பட்​டுள்​ளது.

அதேநேரம்,குதிரை பேர புகார் தொடர்​பான வழக்​கில் முன்பிணை கோரி அசோக்​கு​மார் சென்னை
உயர்நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.நீதிபதி சி.குமரப்​பன் முன்பு இந்த மனு நேற்று மீண்​டும்
விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது காவல் துறை தரப்​பில்,ஆட்​சி​யைக் கவிழ்க்க சதித்திட்​டம் தீட்​டப்​பட்​டுள்​ள​தாக இந்த வழக்​கில்
மிகத்தீவிர​மான குற்​றச்​சாட்​டு​கள் உள்​ளன.எனவே,இந்த வழக்​கில் பதிலளிக்க அவகாசம் தேவை.
மேலும்,இதில் சமஉ செந்​தில்பாலாஜிக்​கும் தொடர்பு இருப்​ப​தால்,பாமஉ மற்றும் சமஉக்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் அமர்​வுக்கு இந்தவழக்கை மாற்றவேண்​டும் என்று கோரிக்கை விடுக்​கப்​பட்​டது.

அதை ஏற்​றுக்​கொண்ட நீதிப​தி,முன்​பிணை வழக்கை சம்​பந்​தப்​பட்ட நீதிபதி முன்பு பட்​டியலிட உத்​தர​விட்​டு,
வி​சா​ரணையை நாளைக்குத் (ஜூலை 8) தள்​ளி​வைத்​தார்​.அதன்​படி,பாமஉ,சமஉக்​கள் மீதான வழக்​கு​களை
வி​சா​ரிக்​கும்​ நீதிப​தி ஜி.கே.இளந்​திரையன்​ முன்​பு இந்​த வழக்​கு நாளை வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

அதற்கு முன்பாக இருவரும் கைது செய்யப்படுவார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Response