
தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவை மே 10 ஆம் தேதி பதவி ஏற்றது.பதவி ஏற்பு விழாவில் இராகுல்காந்தி கலந்துகொண்டார்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் அதிக இடங்களில் வென்ற காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த காங்கிரசு திட்டமிட்டது.இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சுகு ஆகியோர் கலந்து கொண்டனர்.அதோடு இப்போது கூட்டணியில் உள்ள விஜய்க்கும் சிறப்பு அழைப்பு விக்கப்பட்டிருந்தது. அவரும் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தாராம்.
நேற்று மாலை வரை விஜய்,தனி விமானத்தில் திருவனந்தபுரம் செல்வதாகக் கூறப்பட்டிருந்தது.இதற்காக சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் அனுமதியும் கேட்கப்பட்டிருந்தது.ஆனால் திடீரென விஜய்யின் பயணம் இரத்து செய்யப்பட்டது. ஆனால் அதற்கான காரணம் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.
ஏன் திடீரென கேரளா செல்லாமல் விஜய் தவிர்த்தார்?
விஜய்க்கு அதிமுகவைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர்.அவர்கள் பாஜகவின் சம்மதம் பெற்றே விஜய்க்கு ஆதரவு அளித்ததாகச் சொல்லப்படுகிறது.
எனவே, காங்கிரசுடனான நெருக்கத்தைக் குறைத்துக் கொள்ள விஜய் முடிவு செய்துவிட்டார் அதனால்தான் அவர் கேரளா செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.


