
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரு தேர்தல்களிலும் பங்குபெறாமல் ஒதுங்கியிருந்த சசிகலா,2026 சட்டமன்றத் தேர்தலில் பங்கெடுப்பது என்கிற முடிவை எடுத்திருக்கிறார்.
அதற்காக,கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதிலிருந்து வரும் அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று அவர் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறார்.
அதன்படி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பசும்பொன் அருகேயுள்ள கோட்டைமேடு பகுதியில் உள்ள திடலில் பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் பங்கேற்கவுள்ளார்.
இதற்காக, பொதுக்கூட்டம் நடைபெறும் திடல் பகுதியில் இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூகூர்த்தக்கால் நடும் பணி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைகளுக்கான ஏற்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளன.
அம்மா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியில் ஏராளமான அஇஅதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் பங்கேற்றனர்
24 ஆம் தேதி நடைபெறவுள்ள அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் உரையைக் கேட்பதற்காக ஒட்டுமொத்த தமிழக மக்களும், அஇஅதிமுக தொண்டர்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
78 ஆவது அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான முகூர்த்தக்கால் கோட்டைமேடு திடலில் நடப்பட்டதைத் தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருக் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


