விருப்பமில்லாமல் விளையாடிய பாகிஸ்தான் தோல்வி – டி 20 தகுதிச்சுற்று போட்டி

ஐசிசி டி 20 உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டித் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகிறது.இதில், நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற தகுத்திச்சுற்று ஆட்​டத்​தில்
இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின.

மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யிருந்த இந்த ஆட்​டத்​தில் டாஸ் வென்ற பாகிஸ்​தான் அணி​யின் தலைவர் சல்​மான் அலி ஆகா பந்துவீச்சைத் தேர்வு செய்​தார்.

20 ஓவர்​களின் முடி​வில் இந்​திய அணி 7 வீரர்களை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்​தது. பாகிஸ்​தான் அணி தரப்​பில் சைம் அயூப் 3 வீரர்களை வீழ்த்​தி​னார். சல்​மான் அலி ஆகா, ஷாகின் ஷா அப்​ரிடி, உஸ்​மான் தாரிக் ஆகியோர் தலா ஒருவரை வீழ்த்தினர்.

176 ஓட்டங்​கள் என்கிற இலக்​குடன் மட்டை பிடித்தது பாகிஸ்​தான் அணி.

இந்​திய அணி​யின் பந்​து​வீச்​சில் தொடக்​கத்​திலேயே ஆட்​டம் கண்​டது. சாகிப்​சாதா ஓட்டமெடுக்காமல் ஹர்​திக் பாண்​டியா பந்​தில் நடையைக் கட்​டி​னார். ஜஸ்​பிரீத் பும்ரா வீசிய அடுத்த ஓவரில் சைம் அயூப் 6, சல்​மான் அலி ஆகா 4 ஓட்டங்​களில் வெளி​யேறினர். 13 ஓட்டங்களுக்கு 3 வீரர்களைப் பறி​கொடுத்த பாகிஸ்​தான் அணி​யால் அதன் பின்​னர் மீள முடிய​வில்​லை.

முடி​வில் பாகிஸ்​தான் அணி 18 ஓவர்​களில் 114 ஓட்டங்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஷாகின் ஷா அப்​ரிடி 19 பந்​துகளில், ஒரு ஆறு, 2 நான்கு​களு​டன் 23 ஓட்டங்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல்
இருந்​தார்.

இதனால், 61 ஓட்டங்கள் வித்​தி​யாசத்​தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்​திய அணிக்கு இது மூன்றாவது தொடர் வெற்​றி​யாக அமைந்​தது. இந்த வெற்​றி​யின் மூலம் இந்​திய அணி தனது பிரி​வில் 6 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறியது.

இந்திய அணியுடன் விளையாட விருப்பமில்லை என்று பாகிஸ்தான் அணி சொன்னதை ஏற்காமல் அவர்களைக் கட்டாயப்படுத்தி விளையாட வைத்தார்கள்.ஆனால் அதில் அந்த அணி தோல்வியைத் தழுவ வேண்டியதாகிவிட்டது.

இதனால் பாகிஸ்தான் இரசிகர்கள் சோகத்திலும் இந்திய இரசிகர்கள் உற்சாகத்திலும் இருக்கிறார்கள்.

Leave a Response