ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை 2,55,003

 

ஈரோடு மாவட்டத்தில் 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் எஸ்.பிரபாகர் 20.1.16 அன்று வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் 20.9.2015, 4.10.2015, 11.10.2015 ஆகிய நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 114 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பான படிவங்கள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 1.1.2016–ஐ தகுதி நாளாக கொண்டு, இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேற்று வெளியிட்டார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விவரம் வருமாறு:–

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 868 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 8 ஆயிரத்து 722 பெண் வாக்காளர்களும், 2 திருநங்கைகளும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 659 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 300 பெண் வாக்காளர்களும், 44 திருநங்கைகளும் உள்ளனர்.

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 951 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 984 பெண் வாக்காளர்களும், 22 திருநங்கைகளும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 624 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 7 ஆயிரத்து 247 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

பவானி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 925 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 15 பெண் வாக்காளர்களும், 5 திருநங்கைகளும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 914 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 2 ஆயிரத்து 857 பெண் வாக்காளர்களும், 17 திருநங்கைகளும் உள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 87 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 105 பெண் வாக்காளர்களும், 6 திருநங்கைகளும், பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 32 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 552 பெண் வாக்காளர்களும், 16 திருநங்கைகளும் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 8 லட்சத்து 96 ஆயிரத்து 60 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 16 ஆயிரத்து 782 பெண் வாக்காளர்களும், 112 திருநங்கைகளும் என மொத்தம் 18 லட்சத்து 12 ஆயிரத்து 954 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 6 ஆயிரத்து 394 புதிய வாக்காளர்களும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 8 ஆயிரத்து 252 புதிய வாக்காளர்களும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 4 ஆயிரத்து 816 புதிய வாக்காளர்களும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 6 ஆயிரத்து 20 புதிய வாக்காளர்களும் உள்ளனர்.

பவானி சட்டமன்ற தொகுதியில் 6 ஆயிரத்து 427 புதிய வாக்காளர்களும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 5 ஆயிரத்து 574 புதிய வாக்காளர்களும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 5 ஆயிரத்து 630 புதிய வாக்காளர்களும், பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 6 ஆயிரத்து 370 புதிய வாக்காளர்களும் என 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 49 ஆயிரத்து 483 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாராமன், ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, தாசில்தார் மோகனா, தேர்தல் தாசில்தார் சேதுராஜ் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

 

Leave a Response