
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கு இல்லாத காரணத்தால், ஏழை, எளிய விவசாயப் பெருங்குடி மக்கள், தொழிலாளர்கள், ஏன் மாணவர்களும் கூட தொடர்ந்து , மனம் போன போக்கில் மதுவை அருந்தி, நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலி ஆகிறார்கள்.
இந்தக் கொடுமைக்கும், கொடூரப் பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் பலி ஆகிறார்கள் என்ற செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எனவே தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கு’ அமலாகும் காலம் வெகு அண்மையில் உள்ளது என்றே நம்புவோம்.


