புத்தகத்திருவிழாவை ஒட்டி மக்கள்சிந்தனைப்பேரவையின் அடுத்த சிறப்பு

மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா – 2015 ஐ முன்னிட்டு கல்லூரி மாணவ / மாணவியர் பங்கேற்கும் மாநிலந் தழுவிய பேச்சுப்போட்டி ஈரோடு, யு.ஆர்.சி. பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19.07.2015 ஆம் தேதி நடைபெற்றது.

பேச்சுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்துத் தொடக்கி வைத்தார்.

பேச்சுப் போட்டிக்கு சென்னை, திருச்சி, கடலூர், கன்னியாகுமரி, நீலகிரி, அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, காரைக்குடி, மதுரை, பெரம்பலூர், தர்மபுரி, விருதுநகர், இராமநாதபுரம், விழுப்புரம், திருநெல்வேலி, தஞ்சாவூர் கிருஷ்ணகிரி, திருவாரூர், சிவகங்கை,திண்டுக்கல், தேனி, நாமக்கல், கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து500-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் தங்கள் கல்லூரி முதல்வரின் ஒப்புகைக் கடிதத்துடன் பங்கேற்றனர்.

‘வேர்வைகள் எல்லாம் விதையாகும்’ என்ற தலைப்பில் காலை 10.00 மணிக்கு 10 அறைகளில் முதல்சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட 25 மாணவ – மாணவியர் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

பிற்பகல் 2..00 மணிக்கு ‘எழுச்சி தந்த எழுத்து’ என்ற தலைப்பு அப்போதேவழங்கப்பட்டு இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. 11 நடுவர்கள்போட்டியாளர்களின் பேச்சை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்கியதன் அடிப்படையில்முதல் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், திருவண்ணாமலை மாவட்டம், கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

பயிலும் மாணவி ம. அஞ்சலி முதல்பரிசு பெற்றார்.

நாமக்கல் மாவட்டம், மஹேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும்

மாணவி சி. மீனா இரண்டாம் பரிசு பெற்றார்.

விருதுநகர், காமராஜ் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர் மு. காமேஸ்வரன்

மூன்றாம் பரிசு பெற்றார்.

முதல்பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.5,000/-, மூன்றாம் பரிசு ரூ.3,000/-

அத்துடன் நூல்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இப்பரிசுத்தொகையானது 09.8.2015ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடைபெறவிருக்கும் சிந்தனைஅரங்க நிகழ்ச்சியின் மேடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமைவெ.இராமசுப்பிரமணியன் அவர்களால் வழங்கப்படவுள்ளது.

பேச்சுப்போட்டியில் பங்கேற்ற அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.முன்னதாக, பேரவையின் செயலாளர் க. நா. பாலன் வரவேற்றார்.நிகழ்ச்சியின் நிறைவாக பேரவையின் பொருளாளர் என். பழனிசாமி நன்றி கூறினார்.

Leave a Response