
சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என கூறியிருந்தார். வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து என ரஜினி கூறியிருந்தார்.
இக்கருத்துக்குக் கடுமையான எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது என பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசைசவுந்திரராசனும், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் கூறியிருக்கின்றனர்.
இதிலிருந்து ரஜினி, பாஜக மற்றும் அதன் பினாமியான அதிமுகவின் ஊதுகுழல் என்பது நிருபணமாகியிருப்பதாக இதழியலாளர் ஷ்யாம் கூறியிருக்கிறார்.


