
தமிழக அரசின் 2018 -19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15,2018) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் வருவாய் ரூ.1.81 லட்சம் கோடி, செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது
நிதிநிலை அறிக்கையில் துறைவாரியாக திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி குறித்த விவரங்கள்…..
வருவாய்த் துறை ரூ. 6,144 கோடி
குடிமராமத்துப் பணிகளுக்கு ரூ. 300 கோடி
நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 11,073.66 கோடி
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி
பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி
உயர்கல்வித் துறைக்கு ரூ.4620.20 கோடி
தொடர்வண்டிப் பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66 கோடி
வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு
மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்க ரூ.20 கோடி
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு ரூ.347.59 கோடி
பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி
காவல்துறைக்கு ரூ.7877 கோடி ஒதுக்கீடு
மானிய இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி
மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி
சுகாதாரத் துறைக்கு ரூ.11,638.44 கோடி
உள்ளாட்சித் தேர்தலுக்கு ரூ.172 கோடி
வேளாண்மைத் துறைக்கு ரூ. 8,916 கோடி
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ. 972.86 கோடி
தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1,074 கோடி
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி
உள்ளாட்சித் துறைக்கு ரூ.17,869 கோடி
குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,853 கோடி
முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி
அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1,789 கோடி
பழங்குடியினர் நலனுக்கு ரூ. 333.82 கோடி
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 1,336 கோடி
இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ. 71.01 கோடி
பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க ரூ. 758 கோடி
கட்டாயக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 200.70 கோடி
சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1747 கோடி
