
இலங்கை முன்னாளதிபர் ராஜபக்சே, பஷில், கோத்தபாய, யோசித்த, சிரந்தி உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தினரினதும் அரசியல்வாதிகளினதும் ஊழல் தொடர்பில் 2000 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 30 முறையீடுகளே இலங்கை ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்தான தம்மிடமுள்ள மேலும் 20 குற்றச்சாட்டுகள் விரைவில் தாக்கல் செய்யப்படும். இவற்றில் 150 மஹிந்த ராஜபக்சேவிற்கு எதிரானது என ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பு சுட்டிக் காட்டியது.
கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தில் சனவரி 31 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதன் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இவற்றைத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
முன்னைய அரசாங்கம் பல ஊழல் மோசடிகள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி யுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பினது ஊழல் மோசடி தொடர்பிலான ஆவணங்களை தற்போது திரட்டி வருகிறது.
இதற்கமைய இதுவரை 2000 முறைப்பாடுகள் எம்மிடம் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த முறைப்பாடுகளானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, பஷில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக் ஷ, சிரந்தி ராஜ பக் ஷ, யோசித்த, ரோஹித்த ராஜ பக் ஷ உள்ளிட்ட ராஜபக் ஷ குடும்பத்தின ரிற்கும் மேலும் முன்னைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர்கள் தொடர்பிலான மோசடி குறித்த முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராக 150 முறைப்பாடுகளும் சஜித்வாஸ் குணவர்தன எம்.பி.க்கு எதிராக 200 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.இவற்றில் 30 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த முறைப்பாடுகளை உரிய முறையில் செய்து மேலும் 20 முறைப்பாடுகள் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக சஜித்வாஸ் குணவர்த்தன எம்.பி. யின் மனைவியின் பெயரில் சிங்கப்பூ ரில் ஹோட்டல் இருப்பதாகவும் முன் னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம கேவிற்கு சிங்கப்பூர் வங்கி ஒன்றில் கணக்கு இருப்பதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
