அதிமுகவில் இருந்த ஒரே ஆண் சசிகலா – சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு

மோடி வருமானவரித்துறையை வைத்துப் பயமுறுத்தி அதிமுகவை விழுங்கிக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் வலிமையான தலைமை ஒன்று உருவாகிவிடக்கூடாது என்கிற அவருடைய விருப்பமே சசிகலாவின் சிறை மற்றும் தினகரன் ஒதுங்கல் என்று சொல்கிறார்கள். அவர்கள் இருவருமே மோடிக்கு அடிமையாக இருக்க முடியாது என்று உறுதியாக நின்றார்கள். அந்தத் துணிவு அதிமுகவில் வேறு யாருக்கும் இல்லை என்கிற கருத்துகள் சமூக வலைதளங்களில் அதிகம் வருகின்றன.

அவ்வாறு வந்திருக்கும் கருத்துகளில்,

எந்த சமரசமுமின்றி சிறை சென்ற சசிகலாவின் வீரம் கூட பதவிக்காக கட்சியை அடகு வைத்த இவர்களுக்கு இல்லை..
அதனால் தான் ஜெயலலிதா சசிகலாவை தோழியாகவும், இவர்களை அடிமைகளாகவும் வைத்திருந்தார்..

என்றும்,

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது இந்திராவை எதிர்க்கத் துணிவில்லாத நடுவண் அமைச்சர்கள் பலர் இந்திரா அரசு 1977ல் தோல்வியுற்றதும் பல குற்றச்சாட்டுகளை வைத்து விட்டு வெளியேறினர். அப்போது இது குறித்து இந்திராவின் அத்தையான விஜய லட்சுமி பண்டிட்டிடம் கேள்வி கேட்டனர்செய்தியாளர்கள்.

அதற்கு அவர் இப்படி விடையளித்தார்:

இந்திரா செய்ததெல்லாம் தவறுதான். அப்போது தட்டிக் கேட்காமல் வாய்மூடி இருந்து விட்டு இப்போது குற்றம் சாட்டுகின்றனர். என் மதிப்பீடு என்னவென்றால் இந்திராவின் அமைச்சரவையில் இருந்த ஒரே ஆண் இந்திரா மட்டுமே
இது ஏறக்குறையை இப்போதைய அதிமுக அமைச்சர்களுக்கும் பன்னீர். எடப்பாடி குழுவினருக்கும் பொருந்தும்.
பா.ச.க.வை எதிர்த்து நின்று சிறை சென்ற சசிகலா மட்டும் தான் அதிமுகவில் இருந்த ஒரே ஆண் என நினைக்கத் தோன்றுகிறது.

இப்படியான கருத்துகள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response