
கலைப்புலி தாணுவுக்கும் விஷாலுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது ஊரறிந்த ரகசியம்.. தற்போது இருவரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றனர்.. இந்தநிலையில் எதிரெதிர் அணிகளாக இருந்த கலைப்புலி தாணு ஆதரிக்கும் ராதாகிருஷ்ணன் அணியும் கலைப்புலி சேகரன் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்தன..
விஷாலை எதிர்க்க பலமான கூட்டணி வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சியாம்.. இந்த நிகழ்வில் பேசிய தாணு பேச்சுவாக்கில் தற்போது விஷால் நடித்துவரும் துப்பறிவாளன்’ பட வியாபாரம் பற்றிய ரகசியத்தையும் உடைத்தார்.,
“விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்துக்கு 4 கோடி என்பது முதல் பிரதி (first copy) பட்ஜெட்டாம். படம் 21 கோடி ரூபாய் வியாபாரமாம். 17 கோடி லாபமாம். இதை வைத்து யாருக்கு உதவப் போகிறாய் விஷால் ?” என கோபாவேசமாக கேட்டுள்ளார் தாணு.. துப்பறிவாளன் படத்தை மிஷ்கின் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


