மீண்டும் அமலாபாலை தேடிவந்த தெலுங்குப்பட வாய்ப்பு..!


தனது கணவரும் இயக்குனருமான ஏ.எல்.விஜய்யுடனான திருமண முறிவிற்கு பின்னர் நடிகை அமலாபால் தீவிரமாக பட வாய்ப்பு பிடிப்பதில் இறங்கியுள்ளார். அதற்கு கைமேல் பலனாக சில தமிழ்ப்பட வாய்ப்புகளை கைப்பற்றியுள்ள அமலாபாலிற்கு தெலுங்கு தேசத்திலிருந்தும் வாய்ப்பு வந்துள்ளது.

பூரி ஜெகன்நாத் இயக்கவிருக்கும் படத்தில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படத்தில் முதன்மை நாயகியாக நடிகை அமலாபால் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாயகிகள் நடிக்கவிருக்கும் இப்படத்தில் மும்பையைச் சேர்ந்த முஸ்கான் நாயகியாக நடிப்பதாக ஏற்கனவே பூரி ஜெகன்நாத் அறிவித்திருந்தார். சில வருடங்களுக்கு முன் பூரி ஜெகன்நாத் இயக்கிய ‘இட்டராம்மயிலதோ’ என்கிற படத்தில் நாயகியாக அமலாபால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய பட்ஜெட் படம் என்பதாலும், டோலிவுட்டின் முன்ணணி நடிகரான பாலகிருஷ்ணாவின் 101வது திரைப்படம் என்பதாலும் இப்படத்தில் நடிக்க அமலாபாலும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். மூன்றாவது நாயகியாக இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் நெருங்கிய தோழி சார்மி நடிக்கலாம் என கூறப்படுகின்றது.

Leave a Response