‘வி.ஐ.பி-2’வுக்கு ரிலீஸ் தேதி குறித்து விட்டார் தனுஷ்..!


கடந்த வருடம் வரை இரட்டை குதிரை சவாரி செய்துகொண்டிருந்தார் நடிகர் தனுஷ்.. அடுத்து ‘பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராக மாறி இன்னொரு குதிரையையும் சவாரிக்கு இழுத்தார். தனது பிஸியான நடிப்புக்கு இடையே ‘பவர் பாண்டி’ என்ற படத்தை இயக்கி முடித்தும் விட்டார்.

தற்போது ‘இதனிடையே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வந்தார் தனுஷ். இந்தப் படத்தை சௌந்தர்யா தனுஷ் இயக்குகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் டீசர் மே மாத இறுதியில் வெளியாகிறது. மேலும் ‘வி.ஐ.பி-2’ படம் ஜுலை 14ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Response