
நடிகர் விஷ்ணு விஷால், ‘மாவீரன் கிட்டு’ படத்தை அடுத்து புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கும் ‘கதாநாயகன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக முதல் முறையாக கேதரின் தெரசா நடித்துள்ளார்.
இந்தப்படத்தை விஷ்ணுவே தயாரித்து வருகிறார். அவரது முந்தைய படமான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை வாங்கி வெளியிட்ட பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது. இந்தப் படம் ஜூன் 23ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சூரி மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தி ஒன்றாக பயணித்து வருகின்றனர் விஷ்ணுவும் சூரியும்.. கடந்த வருடம் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் விஷ்ணுவுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருந்தார் சூரி.
அதுபோல இந்தப்படத்திலும் இந்த கூட்டணி காமெடியில் கலக்கியிருக்கிறார்களாம்.. ரசிகர்களுக்கு காமெடியில் ஒரு காக்டெய்ல் விருந்தே தயாராகி வருகிறது என்றும் உறுதியாக சொல்கிறார்கள் படக்குழுவினர்.


