‘2.O’வின் தற்போதைய நிலவரம் இதுதான்…!


ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.O’. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ரஜினி – எமி ஜாக்சன் – அக்‌ஷய்குமார் மூவரும் பங்குபெறும் பிரதான சண்டைக்காட்சி ஒன்றையும் படக்குழு படமாக்கியுள்ளது. சண்டைக்காட்சி படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரதான காட்சிகளின் அனைத்தும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். அதோடு எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையுமே முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவுள்ளதாம். இதையும் இன்னும் ஒரிரு தினங்கள் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 14-ம் தேதி ‘2.0’ படத்தின் டீஸரை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது

Leave a Response