
*ஏன் ஜெயலலிதாவை பன்னீர்செல்வம் போட்டுதள்ளி இருக்க கூடாது*
ஆம் . . . ஒருவேளை சசிகலா தன் தோழி ஜெயலலிதாவை போட்டுத்தள்ளியிருக்கலாம் என சந்தேகிக்கும் நாம்,
ஏன் பன்னீர்செல்வமே பதவிக்காக ஜெ.வை போட்டு தள்ளி இருக்க கூடாது என்றும் சிந்திக்க வேண்டாமா ??
கொஞ்சம், சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை பார்ப்போம்.
ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றவுடன் ஜெ.வின் அறிவுறுத்தல்படி முதல்வரானார் ஓபிஎஸ்
ஜெ, சசி விடுதலை ஆகும் காலம் வரை #ஓபிஎஸ் என்ன செய்தார் என பார்ப்போமா ??
ஜெ. விடுதலை ஆகவே முடியாது என என்னிய ஓபிஎஸ் நத்தம் விஸ்வநாதனுடன் இணைந்து கட்சியை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவர முயன்றார்.
அது மட்டுமல்லாது பல மதிப்பிலான சொத்துகளை பினாமியின் பெயரால் வலைத்து போட்டனர்.
இது மிகவும் ரகசியமாக நடந்தது.
ஆனால் ஒன்றரை மாதங்களில் ஜெ,சசி விடுதலையானார்கள்.
ஜெ. திரும்ப வந்தவுடன் தான் இல்லாத காலத்தில் என்ன நடந்தது என அலச ஆரம்பித்தார்.
கொஞ்சம் நாட்கள் போக ஓபிஎஸ் ன் களவாளித்தனம் ஜெ.வுக்கு தெரியவந்தது
ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் உட்பட சில அமைச்சர்கள் ஜெயலலிதாவால் வீட்டு காவலில் வைக்கப்படனர்.
இதை பற்றி அந்த காலத்தில் விகடன், நக்கீரனில் வெளிவந்த கட்டுரைகளை நாம் காண முடியும்.
ஏன் ஸ்டாலின் கூட ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என விமர்சித்தார்.
இது மட்டுமின்றி ஓபிஎஸ் க்கு நெருக்கமான பல அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகளை கூட ஜெ. மாற்றினார்.
இதை நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மூலம் பார்க்கலாம்.
ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகும் வரை மிகுந்த கட்டுப்பாட்டில் காண்கானிக்கப்படவர் தான் ஓபிஎஸ்.
இப்போது ” என்னை அவர்கள் ஜெ.வை பார்க்க அனுமதிக்கவே இல்லை ” என கூறும் ஓபிஎஸ் ஏன் அன்று ” அம்மா நலமாக உள்ளார், என்னிடம் அரசியல் நிலவரங்களை கேட்டறிந்தார்” எனவெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டும் ??
அன்றைய பொழுதில் ஓபிஎஸ் கொடுத்த பேட்டிகளை நாம் கொஞ்சம் புரட்டி பார்த்தால் தெரியும்.
ஜெ. இறந்துவிட்டார் என அறிவித்த சில மணி நேரங்களிலேயே எம் எல் ஏ
க்களுடன் போய் கவர்னரிடம் தன்னை முதல்வராக்கிக்கொண்டார் OPS.
சரி சசிகலா ஏன் ஜெ.வை கொலை செய்திருக்க வேண்டும் ??
சொத்துக்காக என தான் நாம் என்னுகிறோம். உண்மையில் சசிகலாவின் பெயரில் ஏகப்பட்ட சொத்துகள் இருந்தன.
ஜெ தனது 60 % சொத்துக்களுக்கு சசிகலாவை தான் பினாமியாக வைத்திருந்தார்.
பிறகு ஏன் அவர் சொத்துக்காக கொலை செய்திருக்க வேண்டும் ??
ஜெயலலிதா ஓபிஎஸ் ஐ காட்டிலும் சசிகலாவை தான் நம்பினார்.
சசிகலாவை தோழி என்றே குறிப்பிட்டு வந்தார்.
ஆனால் ஓபிஎஸ் அப்படி இல்லை.
ஓபிஎஸ் ஐ தான் இயக்கும் ஒரு துறுப்புச்சீட்டாக தான் வைத்திருந்தார்.
ஜெ மீது இவ்வளவு பாசமிருப்பதாக கூறிக்கொள்ளும் ஓபிஎஸ் ஏன் ஜெயலலிதா இறந்த சில தினங்களிலேயே தன் பாக்கெட்டில் ஜெ. படத்தை எடுத்துவிட்டு சசி படம் வைத்தார் ??
சசி காலில் விழுந்தார் ??
ஜெ. இறந்தவுடன் பதிவிக்கு வந்த ஓபிஎஸ் தன்னுடைய பதவியை இழந்ததற்கு பிறகு தான் இவ்வளவு பேசுகிறார் என்றால் அவர் உண்மை தான் பேசுகிறாரா இல்லை பதவி இழந்ததன் வெளிப்பாட்டில் பேசுகிறாரா என்றும் பார்க்க வேண்டும்.
ஜெ இருந்த போதும், ஜெ இறந்த பிறகும் ஓபிஎஸ் க்கு இல்லாத இந்த தைரியத்தை கொடுத்தது யார் ??
இதோ ஓபிஎஸ் ஆண்ட காலத்தை பார்ப்போம்.
*ஜெ எதிர்த்து வந்த மோடி அரசின் நீட் தேர்வை ஆதரித்தார்.
*ஜெ எதிர்த்து வந்த மோடி அரசின் உதய் திட்டத்தை ஆதரித்தார்.
*மெரினா போராட்டகளத்தில் பங்குகொண்ட இஸ்லாமியர்களை சமூக விரோதிகள் எனவும், ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்தனர் என காவல்துறையே தராத ஒரு பொய்யான தகவலையே காவல்துறை தந்ததென சட்டசபையில் பேசினார்.
*14 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடக்காத, ஜெ. கூட அனுமதிக்காத ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை சென்னையில் நடக்க வழிவகுத்தார்.
இவரை யார் இயக்குகிறார்கள் ??
ஓபிஎஸ் சை பாராட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க வினரை பார்த்தாலே தெரியவில்லையா ??
ஓபிஎஸ் பாசகவுடன் கரம்கோர்த்து பல நாட்கள் ஆகிவிட்டன


