நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் “ஈழவர் பொங்கல் விழா”

தமிழரின் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகளாக நாட்டுப்புற கலைகள் கருதப்படுகின்றன. இசையும் நடனமும் மிக பழங்காலத்திலிருந்தே மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளாக விளங்கி வந்துள்ளன. நாட்டுப்புற மக்கள் தண்ணீர் சுமந்து செல்கிறபோதும், நெல் குத்தும் போதும், உழவு செய்யும் போதும் நாட்டுப்புற இசையும், ஆட்டமும் அவர்களோடு ஒன்றித்து போயின. நாட்டுப்புற கலைகள் நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. தமிழ்நாடு நாட்டுப்புற கலைகளின் களஞ்சியமாக திகழ்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நாட்டுப்புற நடனங்கள்
நாட்டுப்புற ஆட்டங்கள் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்பட்டவை. தங்களின் உழைப்பின் களைப்பிலிருந்து விடுபட நாட்டுப்புற ஆட்டங்களை ஆடி வந்தனர். இதுவே இவர்களின் பொழுது போக்காகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது. கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, பாம்பாட்டம், உருமி ஆட்டம், புலி ஆட்டம், பறை ஆட்டம், காளை ஆட்டம், கொல்லிக் கட்டை ஆட்டம், புலி ஆட்டம், சிலம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கைச்சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்றவை தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளாகும். நாட்டுப்புற நடனங்கள் மிக எளிமையானவை; கலை மதிப்புடையவை என சொல்லப்படுகிறது சங்கப் பண்பாட்டை புலப்படுத்தும் நாட்டுப்புற நடனங்கள் சில இன்றும் ஆடப்பட்டு வருகின்றன. சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படும் சிலவகை நாட்டுப்புற நடனங்கள் இன்றும் வழக்கில் உள்ளதாக கூறப்படுகிறது. பண்டைக் காலத்தில் ஆடிய 11வகை நடனங்கள் பற்றிய தனித்தனியான விளக்கத்தை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நாட்டுப்புற நடனங்களை நேரில் காணும் வாய்ப்பை வழங்குகிறது. தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நாம் அனைவரும் மறந்து விடக்கூடாது, இளைய சமுதாயம் அதனை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் ‘பொங்கு தமிழ்’ எனும் கலாச்சார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்துடன் கலந்து கொண்டு நாட்டுப்புற கலைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பொங்கு தமிழ் நிகழ்வு நடக்கும் இடங்களுக்கு

தமிழீழ பேருந்து மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகத்தில் இருந்து பேருந்து சேவையை வழங்குகின்றது.

நிகழ்வில் பொங்கல் மட்டுமன்றி தமிழர் பண்பாட்டை சித்தரிக்கும் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர்ந்த மக்கள் அமைச்சு,
தமிழ்ப் பாடசாலைகள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் ஈழவர் பொங்கல் விழா 2015!
புலம்பெயர் மக்களை ஒருங்கிணைக்கும் நல்லநிகழ்வு.

Leave a Response