
மணிரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ரொமேண்டிக் ஆக்ஷன் திரைப்படமான ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹிதாரி ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்… தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் முன்னதாக மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழ் புத்தாண்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஏப்ரல் 7ஆம் தேதி அதாவது தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டமாக ‘காற்று வெளியிடை’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் காதல் பாடலின் சிங்கிள் டிராக் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் முதல் பாடல் டீசரை இதுவரை 8 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். சமூக வலைத்தள டாப் டிரெண்டிங்கில் ‘காற்று வெளியிடை’ முதலிடத்தில் உள்ளது. இந்தப்படத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்ஜே.பாலாஜி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


