கொளத்தூர் மணி கீழ்த்தரமாக நடந்துகொண்டார் – பாக்கியராசன் அதிரடி குற்றச்சாட்டு

நாம்தமிழர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினர். வெகுமக்கள் அரசியல் பற்றி அணுவளவும் தெரியாத இவர்களுக்குப் பின்னணியில் உளவுத்துறையினர் இருக்கலாம் என்கிற அய்யம் இருந்தது. ஆனால் இதற்குப் பின்னே தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சி பொறுக்காத திராவிடஇயக்கம் இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. அதைஉறுதிப்படுத்தும் விதமாக நாம்தமிழர்கட்சியின் பாக்கியராசன் கொளத்தூர்மணி அவர்களை நேரடியாகக் குற்றம் சாட்டி எழுதியிருக்கிறார். அவர் எழுதியிருப்பதாவது…….

எத்தனை கஷ்டம் என்பது அருகில் இருக்கும் பொழுது தான் தெரிகிறது.. கட்சி நடத்துவது சாதாரணமில்லை…
எவ்வளவு உழைப்பு..
எவ்வளவு வேலை..
எவ்வளவு அலைச்சல்..
எவ்வளவு உளைச்சல்..
எவ்வளவு நெருக்கடி..
எவ்வளவு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது..
எவ்வளவு பகிர்த்து கொள்ள வேண்டியிருக்கிறது..
உண்மையை சொல்கிறேன் மிக மிக கடினமானது..

இதை எல்லாம் எந்த வித அனுபவமில்லாமலும் உதவியுமில்லாமலும் அண்ணன் சீமானும், நாம் தமிழர் கட்சி இளையவர்களும் இனத்தின் மீதான பிடிப்பில் தங்களுக்கு அறிந்தளவில் செய்துவருவதை பார்க்கும் பொழுது இதில் ஒரு சதவீதம் கூட செய்யாத, செய்ய முடியாததால் பொறுப்புகள் பிடுங்கப்பட்ட இன்று தனியாக வீரியமாக செயல்படுவோம் என்று சொல்லும் வீணர்களை பற்றியெல்லாம் எனக்கு துளி கூட யோசனையில்லை..

ஆனால்.. அரசியலில் பலரால் மதிக்கப்படும் (மதிக்கப்பட வேண்டிய).. பலருக்கு முன் உதாரணமாக இருக்கும் (இருக்க வேண்டிய).. எனக்கும் என் அண்ணனுக்கும் அண்ணனாக இருக்கும் என்று சீமான் அண்ணனால் பலமுறை குறிப்பிடப்பட்ட கொளத்தூர் மணி எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டார் என்று பெரும் யோசனையாக இருக்கிறது.

சீமானோடு பல காலம் தொடர்பிலிருக்கும் பெரிய மனிதன் என்ன செய்திருக்க வேண்டும். சீமானுக்கு அழைத்து “தம்பி என் கருத்தியலுக்கும் உன் கருத்தியலுக்கும் மோதல் இருக்கலாம் ஆனால் உன் கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்கள் என்னை அழைக்கிறார்கள். எதற்கு அதிருப்தி என்று அவர்களிடம் பேசி சமாதனம் செய் என்று சொல்லியிருக்க வேண்டும்.”. இல்லை என்றால் “அவர்கள் அழைப்பை தட்டமுடியவில்லை.. நான் அவர்கள் கூட்டத்திற்கு போகிறேன்” என்றாவது சொல்லியிருக்க வேண்டும். இது இரண்டையும் செய்யாமல் பொறுப்புகளில் இருந்து மாற்றபட்டவர்களின் அதிருப்தியை ஊதி பெரிதாக்கும் வேலை செய்து, அவர்களை கட்சிக்கு எதிராக கொம்பு சீவி தனியாக கூட்டம் நடத்த ஊக்கம் கொடுத்து கூட்டத்திற்கு தலைப்பெல்லாம் வைத்துக்கொடுத்து, அதில் கலந்து கொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி உட்காந்திருக்கிறார் என்று தெரியவில்லை..

அய்யா கொளத்தூர் மணி,

திராவிட எதிர் கருத்தியல் கொண்ட நாம் தமிழர் கட்சியின் மேடைகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏறாத, எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாத நீங்கள் இன்று எப்படி ஏறினீர்கள்? அங்கே எதிர் கருத்தியலை கொண்ட சீமான் இல்லை என்பது தான் காரணம் என்றால் அங்கிருப்பவர்கள் நேற்றுவரை என் இன்றும் கூட அதே கருத்தியலை கொண்டவர்கள் தானே..? எங்களோடு இருக்குவரை சாதிய உணர்வாளராக பார்க்கப்பட்டவர்கள் இன்று எங்களை எதிர்த்தும் உங்களுக்கு எப்படி புனிதர்களாக மாறிப்போனார்கள்? இது தான் உங்கள் நூற்றாண்டு கண்ட கருத்தியலா?.. சீ.. எத்தனை கீழ்த்தரமான கருத்தியல்..

தனக்கு பிடிக்காத தன் கொள்கைக்கு எதிராக இருப்பவர்களை வீழ்த்த உள்ளே புகுந்து அங்கிருக்கும் பலவீனங்களை கையிலெடுத்து கீழ்த்தர அரசியல் செய்யும் சோ, சுசாமி பாணி அரசியலைத் தான் நீங்களும் இப்பொழுது நாம் தமிழர் கட்சியில் செய்திருக்கிறீர்கள். இதுதான் பெரியாரின் அரசியலோ ? உங்கள் முன்னோர்களின் அரசியலோ? என்ற ஐயம் முன்பெபொழுதும் விட அதிகமாக தோன்றுகிறது. தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் திட்டமிட்டு வஞ்சிக்கும் இந்த அரசியல் உங்களிடமிருந்தும் வெளிப்படுவது சகிக்க முடியாத அருவருப்பையும் குமட்டலையும் உண்டாக்குகிறது..

அய்யா.. இத்தனைக்கு பிறகும் மிகப் பணிவோடு உங்கள் அரசியல் அனுபவத்தில் பாதியே வயதில் இருக்கும் நாம் தமிழர் கட்சி இளவட்டங்கள் நாங்கள், அறம் ஒருநாள் வெல்லும் என்பதில் மிகபெரும் நம்பிக்கை வைத்திருக்கும் சிறிய பிள்ளை நாங்கள், அறத்தின் உருவமாம் மாசற்ற தலைவன் தேசிய தலைவர் பிரபாகரன் மீது ஆணையிட்டு சொல்கிறோம்.. இப்படி நீங்கள் எங்களுக்கு எதிராக எத்தனை கேவலப்பட்ட வேலை செய்தாலும் உங்களால் எங்கள் வளர்ச்சியையோ வெற்றியையோ மயிரளவிற்கு கூட தடுக்க முடியாது.. அதே போல் இனி உங்கள் கருத்தியலை, அரசியலை மண்ணோடு மண்ணாக்கும் வேலையையும் தடுக்க முடியாது..

# அறிவையே சொத்தாக்கி வழக்கு போட்டு சண்டை போடும் உங்களுக்கு இந்த அறிவுரையை சொல்கிறேன் என்று தவறாக என்ன வேண்டாம்..சொல்ல வைத்துவிட்டீர்கள்..

“வயதாக வயதாக மரியாதை உண்டாக்க காரியம் செய்யுங்கள்.. உங்கள் முன்னோர்களுக்கும் சேர்த்து மானத்தை வாங்கும் காரியத்தை செய்யாதீர்கள்..”

Leave a Response