உணர்வுகளையும் போராட்டத்தையும் ஆழம் பார்த்து தீர்வு காண்பதா? – தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கோபம்

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகளும் பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.

24 ஏஎம் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆர்.டி.ராஜா, போராடிய மாணவர்களைப் பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,

மக்களுக்காகவே அரசு,
அரசுகளுக்காக மக்கள் இல்லை.

மக்களுக்காகவே நீதிமன்றங்கள்,
நீதிமன்றங்களுக்காக மக்களில்லை.

தாமதமாக வந்து சேரும் நீதி
அநீதிக்குச் சமம்.

மக்களின் உணர்வுகளையும்
போராட்டங்களையும்
ஆழம் பார்த்த பின்
அரசுகள்,
தீர்வை நோக்கி நகர்வது
ஓட்டு அரசியல்.

வரும்முன் காப்பதே
மக்களுக்கான அரசு.

அரசு மற்றும் நீதிமன்றங்களின்
மக்கள் விரோதப் போக்கு
முடிவுக்கு வந்தே
தீர வேண்டிய தருணம்.

மக்களாட்சித் தத்துவத்தில்
ஆட்சியாளர்களும்
அதிகார வர்க்கமும்தான்
மக்களிடம்
கையேந்தி நிற்க வேண்டும்-
மக்களில்லை.

மக்களாட்சி தத்துவம்,
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
என்பன
வெறும் வார்த்தை விளையாட்டில்லை.

ஜனநாயகத்தின் ஆணிவேர்.

இதை அதிகார வர்க்கங்கள் உணரவேண்டும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க,
உண்மையான
உணர்வுப்பூர்வமான
மாபெரும் போராட்டத்துக்கும்,
தமிழகத்தின்
வீரத்தையும்
தன்மான உணர்வையும்
தலைநிமிரச் செய்த
மாணவர்களுக்கும்
தலைவணங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response