சுந்தர்.சியின் ஆறு மாத மௌனத்திற்கு காரணம் இதுதான்..!


சுந்தர்.சி இயக்கிய அரண்மனை-2 கடந்த ஜனவரியில் வெளியானது.. அதன்பின் கடந்த ஜூன் மாதம் அவர் நடிப்பில் வெளியான ‘முத்தின கத்திரிக்காய்’ வெளியானது. அந்த படத்திற்குப்பின் சுந்தர்.சி தனது பட அறிவிப்பு குறித்து எதுவும் பேசவில்லை..

ஆனால் அவர் சங்கமித்ரா என்கிற சரித்திர படத்தை இயக்கப்போவதாக சொல்லப்பட்டு வந்தது.. சமீபத்தில் அந்த படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் அதை உறுதி செய்தது..

சுந்தர்.சி இதுபற்றி கடந்த ஆறு மாதங்களாக மௌனம் காத்தது எதனால் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இந்தப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கிறது. கதைப்படி நடிகர், நடிகைகள் இல்லாத கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் வேலையை கடந்த 6 மாதத்திற்கு முன்பே சுந்தர்.சி. தொடங்கிவிட்டார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஈரான் ஆகிய நாடுகளில் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள். இன்னொரு பக்கம் கலை இயக்குனர் சாபுசிரில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படத்திற்கான அரங்கம் அமைத்து வருகிறார்.

இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதன்முறையாக சுந்தர்.சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இந்தப்படத்திற்காக ஜெயம் ரவியும், ஆர்யாவும் ஒன்றரை ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் ஹீரோயின்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.

Leave a Response