கறுப்பு பண விவாகரத்தை கையில் எடுத்திருக்கிறதா ‘பைரவா’..?


கடந்த இரண்டு மாதங்களாக சாதாரண மக்கள் வரையிலும் கூட செல்லாத நோட்டு விவகாரமும், கறுப்பு பண ஒழிப்பும் தான் பேசப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் விஜய்யின் பைரவா படத்தின் கதையும், கறுப்பு பணம் ஒழிப்பதை மையமாக வைத்து தான், தயாராகி உள்ளது என சோஷியல் மீடியாவில் சிலர் ஆருடம் சொல்லி வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரெய்லரில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது தான், இந்த தகவல் பரவுவதற்கு காரணம் என்று தெரிகிறது.. இந்த காட்சிகளை பிரதமரின் அறிவிப்புக்கு பின் படமாக்கினார்களா, இல்லை கதைப்படி அமைந்திருந்ததா என்பது படம் வந்த பின்னர்தான் உறுதியாக தெரியும்…

Leave a Response