ஜல்லிக்கட்டு பற்றி ஆர்யாவுக்கு தெரியாதா என்ன..?


ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டு மகளை பொறுத்தவரை எவ்வளவு சென்சிடிவான விஷயம் என்பது தெரியும்.. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசாவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் அதனை எதிர்ப்போர் மீதோ, கிண்டல் செய்வோர் மீதோ மக்கள் உடனடியாக கோபம் கொள்கின்றனர். இந்தசூழலில் தான் நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் “ஜல்லிக்கட்டு என்றால் என்ன?” என்ற கேள்வி கேட்டு பதிவிட்டு இருந்தார். இந்த பதிவானது பொதுமக்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

பலரும் ஆர்யாவை காய்ச்சி எடுத்துவிட்டனர். நீ தமிழனே இல்லையா?, படத்தில் மட்டும் நடிக்கும் வேலையை பார், நிஜத்தில் நடிக்காதே என்று திட்டி தீர்த்துவிட்டனர். எதிர்ப்பு அதிகமாவதை உணர்ந்த ஆர்யா நானும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவன் தான் என்று விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல. எனது டுவிட்டர் பதிவை வேறு கண்ணோட்டத்தில் திசை திருப்பிவிட்டனர் என்றும் கூறி பிரச்சனையின் தீவிரத்தை கொஞ்சம் தணித்தார்.

Leave a Response