பட்டப்பகலில் மணல் கொள்ளை -புகைப்பட ஆதாரம்

 இயற்கையை காப்பாற்றவும்,நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் கட்சிகளும்,தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் போராடி வரும் இவ்வேளையில்,உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றங்கள் மணல் அள்ளுவதை தடைவிதித்திருக்கும் இவ்வேளையில் பவானி நதியின் கிளை நதியான மேட்டுப்பாளையம் கல்லாற்றில் பட்டப்பகலில் பகிரங்கமாக பிளாக் தண்டர் எதிரே உள்ள ஓடாந்துறை பஞ்சாயத்துப் பகுதியில் கல்லாற்றில் மணலை லாரி மூலம் திருடி வருகிறார்கள்.

 பட்டப்பகலில் நடக்கும் இந்த மணல் கொள்ளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்துதான் நடக்கிறதா?கழுதைகள் மூலமாகவும்,மாட்டுவண்டிகள் மூலமாகவும்,இலை மறையாக,காய் மறையாக நடந்த மணல் திருட்டு இப்போது பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் தேங்கியுள்ளதால் கிளை நதிகளில் மணலைத் லாரி மூலமாக திருட துவங்கிவிட்டார்கள்.

இதுபோன்ற மணல் அள்ளுவதால் ஏற்கனவே அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக குறைந்துவிட்டதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.பட்டப்பகலில் நடக்கும் மணல் திருட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.இது கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும்.மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

       

Leave a Response