வறுமையில் வாடும் மறைந்த இசையமைப்பாளர் குடும்பத்துக்கு விஷால் உதவி..!


எண்பது, தொண்ணூறுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மனிதன், விடுதலை, ராஜா சின்ன ரோஜா போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.. நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்த இவர், பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் கடந்த 2010ல் சந்திரபோஸ் மரணமடைந்தார்.

தற்போது அவருடைய குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், அவருடைய மனைவி ராஜகுமாரி அவர்கள் மருத்துவ செலவிற்கும் கஷ்டப்பட்டு வருவதாகவும் விஷாலின் காதுகளுக்கு தகவல் வந்தது.. இதையடுத்து அவர்களை வரவழைத்து தனது தேவி அறக்கட்டளை மூலம் குடும்ப நல நிதி உதவியை வழங்கியுள்ளார் விஷால்.

Leave a Response