திருமணத்துக்கு தயாராகிறார் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி..!


சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்து வருவதுடன்,. குரலோடு குணத்தாலும் ரசிகர்கள் அனைவரையும் வசீகரித்திருப்பவர் தான் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி.. கண்பார்வையற்ற இவருக்கு ஆண்டவன் நல்ல குரல் வளத்தை கொடுத்துள்ளான். அதை முறையாக பயன்படுத்தி தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து பாடிவருகிறார் விஜயலட்சுமி..

இந்த நிலையில் கேரளாவில் கோழிக்கோடு அருகில் உள்ள புதியங்காடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் விஜயலட்சுமி.. சந்தோஷும் இசைத்துறையை சேர்ந்தவர் தானாம்.. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வரும் டிச-13ஆம் தேதி நடைபெறுகிறது.. அதை தொடர்ந்து வரும் 2017 மார்ச் 29ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

Leave a Response