எவன் இருந்தாலும் வெட்டுவேன் – அஜித், விக்ரமுக்கு சவால்விடும் விஷால்.


விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் ‘ஆம்பள’. ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் நடித்துள்ளனர்.

சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

‘ஆம்பள’ பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர்அன்புச் செழியன் ஆகியோர் பாடல்களை வெளியிட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் ஆர்யாவும் பெற்றுக் கொண்டனர்.


தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி பேசும் போது

” என் மகன் விஷால் கடுமையாக உழைக்கும் பையன்..அவனை வேறுமாதிரி நடிகராக்க விரும்பினேன். ஆனால் ‘அவன் இவன்’ நடித்த பிறகு அவன் விருப்பத்துக்கு விட்டு விட்டேன். தலையிட வில்லை ” என்றார்.

மன்சூர்அலிகான் பேசும் போது

” திருட்டு விசிடியை ஒரே நாளில் ஒழித்துக் காட்டுகிறேன். ஜெயிலுக்குப் போகிறவர்கள் என் பின்னால் வாருங்கள், ” என்றவர், விஷாலுக்கு ‘ஆக்ஷன் ஸ்டார்’ பட்டம் வழங்கினார்.

தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்  பேசும் போது

“மீசை வச்சவன் எல்லாம் ஆம்பள இல்லை. நீங்கள் மீசை வைக்கவில்லை என்றாலும் .சொன்ன தேதியில் படத்தை அறிவித்து வெளியிடும்  நீங்கள் ஆம்பளதான். சுந்தர்.சி இன்னொரு ஆம்பள.இருவருக்கும் வாழ்த்துக்கள். “என்றார். .


இயக்குநர் 
ஆர்.கே.செல்வமணி பேசும் போது, 
 ” திருட்டு விசிடிக்காக ரோட்டில் இறங்கிப் போராடி அடித்த விஷால் முதல் ஆம்பள. திருட்டு விசிடியை எதிர்க்கும் உணர்வை தந்திருக்கும் விஷால் நிஜ ஆம்பள. “என்றார்.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன்
 “நாங்கள் முன்பெல்லாம்  பூஜையன்றே ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டுத்தான் படம் வெளியிடுவோம்.பல ஆண்டுகளுக்குப்பின் இன்று விஷால் செய்கிறார்  வாழ்த்துக்கள்.” என்றார்.


ஆர்யா பேசும் போது
” விஷாலிடம் என்ன மச்சான்  படம் எப்போ வெளியாகிறது என்றேன். பொங்கலுக்கு என்றார் .பொங்கலுக்கு என்றால் பெரிய படங்கள் வருமேப்பா என்றேன்.
எவன் இருந்தாலும் வெட்டுவேன் என்றார். விஷாலின் அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்தது.”என்றார்.(பொங்கலுக்கு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள  ஐ  மற்றும் கவுதம்மேனன் இயக்கத்தி அஜித் நடித்துள்ள என்னைஅறிந்தால் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகும் என்று விளம்பரங்கள் வந்துகொண்டிருப்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது)

‘ஆம்பள’ இயக்கியுள்ள சுந்தர்.சி பேசும்போது
.” இது ஒரு பேமிலி எண்டர் டெய்னர். படமே திருவிழா போன்ற உணர்வு தரும். நான் வேகமாக ஓடுபவன். என்னையே விரட்டி விரட்டி வேலை வாங்கியவர் விஷால்.” என்றார்.

விஷால் பேசும்போது

” முதலில் தலைப்பு பற்றி ஒரு பயம் வந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது எனக்கு இன்னொரு பயம் இருந்தது. ஏற்கெனவே சுந்தர்சியுடன் இணைந்து நடித்த ‘மத கஜ ராஜா’ .படம்  இன்னமும் வெளிவரவில்லை.சினிமாவில் செண்டிமெண்ட் அதிகம்.அதனால் பலரும் கேட்டார்கள். ஏற்கெனவே இப்படி இருக்கும் போது மறுபடியும் சுந்தர் சியுடனா படம் பண்ணப்போறே? என்று பலபேர் கேட்டார்கள். இருந்தாலும் நான் தெளிவாக முடிவாக இருந்தேன். இந்த ‘ஆம்பள’ லைன் முன்பே சொல்லப்பட்டதுதான் .சுந்தர்.சிக்கும் எனக்குமான நல்லுறவு நன்றாக இருக்கிறது. அது ஒரு சொத்து போன்றது.

செப்டம்பர் 20ல் தொடங்கிய படம் டிசம்பர் 26ல்  தயாராகி விட்டது. மூன்றே மாதத்தில் முழுப்படமும் முடித்தோம் எல்லாரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினோம். பலரும் எனக்காக கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.

நெருக்கடியில் பதற்றத்துடன் டென்ஷனுடன் உழைத்திருக்கிறார்கள். இப்படி சிரமப்படுத்தி கஷ்டப் படுத்துவது இது  கடைசிப் படமாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இனியும்  ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு இப்படிச்செய்வது நல்லதல்ல.ஆனாலும் சுந்தர்.சி சார் சீக்கிரம் முடித்தாலும் தரமாகவும் முடித்திருக்கிறார் .
படம் முடிந்துதான் விடுமுறைப் பயணம் போவார்கள். இந்தப் படமே ஜாலியான ஹாலிடே அனுபவமாக இருந்தது. டைரக்டர் அந்த அளவுக்கு டென்ஷன் இல்லாமல் எடுத்தார்.

இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட 2500 ரூபாய்தான் செலவு . ஆர்.ஏ. புரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா செய்தார். பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு.இதை வெளியிடும் வி மியூசிக்கில் இதன்  6 பாடல்களும் பெரிய அளவில் வெற்றிபெறும்…

முதன்முதலில் ஹன்சிகா என்னுடன் நடித்து இருக்கிறார்.ஹன்சிகா  ஜோடி என்றதுமே எனக்குப் பயம். அவர் நல்ல வெள்ளை. நான் அட்டகறுப்பு. கேமரா மேனுக்கு கஷ்டம் என்று நினைத்தேன். ‘நீ லண்டன் லட்டு நான் மதுரை புட்டு’ என்று பாட்டே வரும். இருந்தாலும்  அவர் சமாளித்து எடுத்தார். சினிமா என் தாய் மாதிரி. அதற்கு யார் கெடுதல் செய்தாலும் விடமாட்டேன். திருட்டு விசிடிக்காக தொடர்ந்து போராடுவேன். “இவ்வாறு விஷால் பேசினார்.

Leave a Response