
நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற பிடிவாதத்துடனேயே கடந்த ஐந்து வருடங்களை ஓட்டிவிட்டார் வடிவேலு.. இந்த இடைப்பட்ட காலத்தில் இவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களும் சரியாக போகவில்லை.. அடுத்து கதாநாயகனாக நடிக்கலாமா வேண்டாமா என அவர் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தான் இயக்குனர் சுராஜ், அவரை தான் இயக்கும் ‘கத்திச்சண்டை’ படத்தில் விஷாலுடன் சேர்ந்து முக்கியமான காமெடி வேடத்தில் நடிக்கவைத்துவிட்டார்..
சரி, இந்தப்படத்தில் நடித்துவிட்டோம், இனியாவது கதாநாயகனாக நடிக்க ஒரு கதை தேடுவோம் என நினைத்த வடிவேலுவுக்கு அடுத்த செக் வைத்தார் ஜி.வி.பிரகாஷ்.. கூடவே சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இயக்குனர் ராம்பாலாவும் சேர்ந்துகொண்டார்.. ஆம். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் கதாநாயகனுக்கு இணையான காமெடி கேரக்டரில் வடிவேலுதான் நடித்தாகவேண்டும் என அவரை வற்புறுத்தி, ஒருவழியாக சம்மதிக்கவும் வைத்துவிட்டார்கள்.


