
மனதில் பட்டதை படபடவென்று வெளிப்படையாக பேசுபவர் இயக்குனர் கரு பழனியப்பன். இவர் இன்று நடைபெற்ற குழுந்தை வேலப்பன் இயக்கத்தில் கிருஷ்ணா, ஸ்வாதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாக்கை’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசும்போது தனக்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்குமான ‘சேரா காதல்’ பற்றி கூறி சுவாரஸ்யம் ஏற்படுத்தினார்..
அதாவது கரு பழனியப்பன் தான் முதல் படம் இயக்க தயாரானபோது, அதற்கு இசையமைக்க யுவனைத்தான் ஒப்பந்தம் பணியிருந்தார்.. ஆனால் சூழ்நிலை காரணமாக அந்தப்படம் நின்றுபோக, கரு.பழனியப்பன் வேறு ஒரு படத்தை தனது முதல் படமாக இயக்கினாராம்.. ஆனால் இசை யுவன் அல்லவாம்.
அன்றிலிருந்து இன்றுவரை அவரால் தனது படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க வைக்கவே முடியாமல் போய்விட்டதாம். அதனால் தான் தனக்கும் யுவனுக்குமான காதல் ‘சேரா காதல்’ என்று குறிப்பிட்டார் கரு.பழனியப்பன்


