சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த விஷால்-சிம்பு


கடந்த இரண்டு நாட்களாக ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயம் என்றால் அது ‘ரெமோ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் கண்ணீர்விட்டு அழுதது தான். தனது படங்களை வெளியிட விடாமல் தடுப்பதாகவும், தன்னை வேலை செய்யவிடாமல் தடுப்பதாகவும் அவர் யாரையோ குற்றம் சாட்டினார்..

இதுகுறித்து அவர் நடிகர் சங்கத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லைதான். ஆனால் இந்த செய்தி நடிகர் சங்க தலைரான விஷால் கவனத்துக்கு போனது.. அவர், “நானும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்துள்ளேன்.. அது யார் என்று எனக்கு தெரியும்.. சிவகார்த்திகேயன் பிரச்சனைக்கு நல முடிவு காணப்படும்” என கூறியுள்ளார்..

இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் சிம்புவும் தனது ஆதரவை சிவகார்த்திகேயனுக்கு வழங்கியுள்ளார். இதுபற்றி அவர் தனது டிவிட்டரில், “கவலைப்படாதே சிவா.. இதுபோன்ற நிகழ்வுகள் எனக்கும் நடந்துள்ளது.. அவர்களுக்கு இதுபோன்று செய்வதே வேலை.. நாம் நம் வேலையை சரியாக செய்வோம்.. அவர்களை கடவுள் பாரத்துக்கொள்வான்” என குறிப்பிட்டுள்ளார்.

எதிரெதிர் துருவங்களான சிம்புவும் விஷாலும் சிவகார்த்திகேயன் விஷயத்தில் ஒன்றாக குரல் கொடுத்திருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

Leave a Response