
இந்தியில் தனுஷ் ஜோடியாக அறிமுகமான கமலின் இளைய மகள் அக்சரா ஹாசனுக்கு அங்கே வரவேற்பில்லாததால், தமிழில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அதனை தொடர்ந்து தனது அக்கா ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த விஷாலுடன் தானும் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அக்சரா.
கத்திசண்டை’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார் விஷால். தற்போது இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். விஷாலுடன் முக்கிய கதாநாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க,வில்லனாக பிரசன்னாவும், முக்கிய வேடத்தில் வினய், இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.


