
தற்போது ‘பான் பஹார்’ என்னும் ஒரு விளம்பர படம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது… அறுபது வினாடிகள் ஓடக்கூடிய இந்த விளம்பர படத்தில் இரண்டு ஸ்பெஷல் அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று, ஹாலிவுட் ‘ஜேம்ஸ் பாண்ட்’ புகழ் பியர்ஸ் பிராஸ்னன் இந்த விளம்பர படத்தில் நடித்திருப்பது.
மற்றொன்று, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இந்த விளம்பர படத்திற்கு இசையமைத்திருப்பது… இந்த விளம்பர படத்தின் பின்ணணி இசைக்காக யுவன்ஷங்கர் ராஜா உபயோகப்படுத்தி இருக்கும் ‘வயோலா’ ரக இசை கருவியும், ‘கியூபா’ நாட்டின் பிரசித்தி பெற்ற ‘மாம்போ’ தாளங்களும், ரசிகர்களுக்கு ஒரு ‘ஜேம்ஸ் பாண்ட்’ படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதென்னவோ உண்மை
