ஆஸ்திரேலியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளைவிட கேரளாவிலுள்ள மணப்புரம். முத்தூட் ஆகிய நிறுவனங்களிடம் அதிக அளவில் தங்கம் இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு தமிழ்த்தேசிய இயக்கங்களின் முன்னோடியான கோவை விசயகுமார் . வெளிப்படுத்தியிருக்கும் சிந்தனை….
ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த ஒரு செய்தி _
கேரளாவின் 3 நிறுவனங்களிடம் (மணப்புரம், முத்தூட், இனனொரு நிறுவனம்) நார்வே மற்றும் ஆஸ்திரேலியாவிடம் இருப்பதைப் போன்று 3 மடங்கு தங்கம் கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.
இதனைத் தமிழர்களாகிய நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?
1)கடந்த 10 ஆண்டுகளில் இந்த கேரள நிறுவனங்கள் தென் மாநிலங்களில், குறிப்பாகத் தமிழகத்தில் எங்கும் கிளைகளைத் (அடகுக்கடைகளை) திறந்துள்ளது. ஏழைத்தமிழர்களின்
நகைகள் ஏராளமாக இவர்களிடம் சிக்கியிருக்க வாய்ப்புண்டு.
2) கேரள மக்களைவிட தங்க நகைகள் வாங்கிச் சேமிக்கும் பழக்கம் தமிழர்களிடம் காலந்தொட்டு இருந்து வருகிறது. வீட்டில் நடைபெறும் விழாக்கள் (மணவிழா, காதுகுத்தல், பூப்பூநன்னீராட்டு விழா போன்றவை) சீர் வைப்பதற்காக ஏராளமான தங்கம் வாங்கப்படுகிறது. டன் கணக்கில் தமிழர்கள் வாங்கும் தங்கத்தை விற்பனை செய்பவர்கள் யார் என்ற பார்த்தால் பெரும்பாலும் தமிழரல்லாதோராகத்தான் (தெலுங்கர்கள், சேட்டுகள், மலையாளிகள்) இருப்பர்.
சரி இதற்குத் தீர்வு என்ன? தமிழர்களில் தொழில் செய்வோர் பலரும் இப்போது விடுதிகள், பேருந்துகள் போன்ற துறைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நல்லது. ஆனால் தமிழ் இளைஞர்கள் இன்று முன்னேறுவதற்காகப் பலதுறைகளைத் தேடி வருகின்றனர். இந்தத் தங்க வாணிகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஏன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட 10 அல்லது 20 பேர் சேர்ந்து இந்த வணிகத்தில் இறங்கக்கூடாது? அப்படி நாம் ஈடுபட்டால் நம் தமிழர்களின் பொருளாதாரம் நம்மிடையேயே இருக்கும்.
பொருளாதாரத்தை எவன் கையில் வைத்திருக்கிறானோ அவன் கையில்தான் அரசியல் அதிகாரம் இருக்கும்.
தெலுங்கர்களிடம் (திராவிடர்களிடம்) ஆட்சி இருக்கிறது என்று குமுறுகிறோம். அவர்கள் தங்கள் பொருளாதார நலன்களைப் பெருக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். அதனைக் காப்பாற்றக்கூடிய கட்சிகளை, தலைவர்களை தங்கள் இனத்திலிருந்து உருவாக்குகிறார்கள். எனவே நாம் பொருளாதாரப் போரை உடனடியாக அவரவர் முடிந்த அளவில் தொடங்கவேண்டும். கூட்டுறவு மனப்பான்மையில் செயல்பட்டால் தமிழகத்தில் இன்று வேரூன்றியிருக்கும் பிற மாநிலத்தவரின் பொருள் வளத்தை நாம் கைப்பற்றிவிட முடியும். அரசியலும் நம்மிடம் இருக்கும்.
சிந்திப்பீர்.