
பொதுவாகவே ஒரு படத்தில் வேலை பார்க்கும் உதவி இயக்குனர்கள் பரபரப்பும் டென்ஷனுமாகவே இயங்கி கொண்டு இருப்பார்கள்.. காரணம் அலுவலகத்திலும் மற்ற நேரங்களிலும் தங்களது உதவியாளர்களிடம் நண்பனை போல ஜாலியாக பேசும் இயக்குனர்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்டிப்பான கணக்கு வாத்தியார் போல மாறிவிடுவார்கள். அங்கே அவர்களுக்கு ஷூட்டிங் தடைபடமால் நடக்க வேண்டும் என்பதுமட்டுமே எண்ணமாக இருக்கும்.
அதனால் உதவி இயக்குனர்களும் தூக்கம் தொலைத்து ராப்பகலாக பணியாற்றிக்கொண்டு இருப்பார்கள்.. சாதாரண நடிகர்களின் படம் என்றாலே அதிகமாக இருக்கும் இந்த டென்ஷன், சூப்பர்ஸ்டார் படம் என்றால் எப்படி இருக்கும் என சொல்லவும் வேண்டுமோ..?
இப்படித்தான் ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தில் ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜென்னி என்கிற பெண் இயக்குனர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அருகில் இருந்த டென்ஷன் காரணமாக இரண்டுமுறை அவர் மீது தவறி விழுந்து விட்டாராம்.. ஆனால் இரண்டுமுறையும் ரஜினி அவரை கைதூக்கிவிட்டு, பாத்தும்மா.. ஏதாச்சும் அடி கிடி பட்டுருச்சாம்மா என அன்புடன் விசாரித்து அவரை சாந்தப்படுத்தினாராம்.
இதற்கு காரணம் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் ரஜினி கேரவனில் ஒய்வு எடுக்க செல்லாமல் ஷூட்டிங்ஸ்பாட்டிலேயே அமர்ந்திருந்ததும் அங்கேயே சுற்றி வந்ததும் தானாம்.


