விஸ்வரூபம்-2வுக்கு விமோசனம் கிடைக்கப்போகிறது..!

இரண்டு வருடத்திற்கு முன்பே படமாகியும் கூட, இன்னும் ரிலீசாகாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கும் கமலின் ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு இப்போது விமோசனம் கிடைக்கப்போகிறது. விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் கிட்டத்தட்ட அப்போதே எடுத்து முடித்துவிட்டார் கமல்.

ஆனால் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் வரிசையாக அடுத்தடுத்து தயாரித்த மற்ற படங்களினால் மிகப்பெரிய கடன் சுமைக்கு ஆளானதால், ‘விஸ்வரூபம்-2’ ரிலீஸாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் கமல், அவர் நடித்துவரும் ‘சபாஷ்’ நாயுடு படத்தின் படப்பிடில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.. அதனால் இந்தப்படத்தின் ரிலீசும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது..

இதனால் ரசிகர்களுக்கும் தனக்கும் ஏற்படும் இடைவெளியை குறைக்கும் விதமாக ‘விஸ்வரூபம்-2’ படத்தை வெளியிடும் எண்ணம் கமலுக்கு தோன்றியுள்ளதாம். தற்போது ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடனில் இருப்பதால், ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு அவர் செலவு செய்த பணத்தைக் கொடுத்துவிட்டு, தற்போது தனது ‘சபாஷ்’ நாயுடு’ படத்தை தயாரித்துவரும் லைகா நிறுவனத்துடன் இணைந்து தானே வெளியிட முடிவுசெய்துள்ளாராம் கமல்.

 

Leave a Response