ராஜபக்சே திருப்பதி வந்த நிகழ்வு – பாதிக்கப்பட்ட சன் தொலைக்காட்சி நிருபருக்கு ஆந்திர அரசு நட்ட ஈடு தரவேண்டும்

சன் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருக்கு ஆந்திரப் பிரதேச அரசாங்கம் 20ஆயிரம் ரூபாயை நட்டஈடாகவழங்கவேண்டும் என்று இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

2014ம் ஆண்டு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ச திருமாலா என்ற இடத்துக்கு சென்ற போது போராட்டம் ஒன்று நடத்தப்படஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்தநிலையில் சேலத்தில் பணியாற்றிய இந்த சன் தொலைக்காட்சி செய்தியாளர் எஸ்.குணசேகரன் ,குறித்த செய்தியை பெறுவதற்காக சென்றிருந்த போது அவரை திருப்பதி நகர காவல்துறையினர் பல மணி நேரம் தடுத்து வைத்தனர்.

அவர் தம்மை இனங்காட்டாமை காரணமாகவே தடுத்து வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

எனினும் இதனை தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

அத்துடன் அவரை தடுத்து வைத்தமையானது இந்திய அரசியலமைப்பின் கீழ் பெரிய மீறல்சம்பவம் என்று ஆணைக்குழு ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே முறைப்பாட்டாளருக்கு 6 வார காலப்பகுதியில் நட்டஈட்டை செலுத்தவேண்டும் என்றும்ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.

Leave a Response