தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய உணர்வு வர நாம்தமிழர்கட்சிக்கு வாக்களியுங்கள் – சீமான் வேண்டுகோள்

பெருந்துறை சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக லோகநாதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்று தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் பற்றுக்கொண்டவர்கள் போல பேசிய திராவிட கட்சிகளுக்கு என்றுமே தமிழ் தேசிய உணர்வு இருந்தது இல்லை. நமக்கு அருகில் உள்ள கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் உள்ள கட்சிகள் முதலில் தங்களுடைய மாநில உரிமைகளுக்காக ஒன்று இணைந்து போராடுகிறார்கள். அதற்கு பிறகுதான் அவர்கள் இந்திய தேசியம் குறித்து பேசுகிறார்கள்

ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை அப்படி இருக்கிறதா? என்றால் இல்லை. தமிழ்நாட்டில் தமிழ் தேசிய உணர்வுகளை விட இந்திய தேசிய உணர்வுகள் கொண்ட கட்சிகள் தான் அதிகம் உள்ளன. முதலில் தமிழக மக்களாகிய நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று உள்ளது எனில் அது தமிழ் தேசியம் ஆகும். நாம் அனைவரும் தமிழ் தாயின் பிள்ளைகள். நமக்கென்று ஒரு பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம், வரலாறு உள்ளது. ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பரிய விளையாட்டு மட்டுமல்ல. அது நம் பண்பாட்டு கலாசாரம் ஆகும். இளநீரும், பதனீரும் நம்முடைய பாரம்பரிய குளிர்பானம் ஆகும். ஆனால் கோகோ கோலா நம்முடைய பாரம்பரிய குளிர்பானமும் இல்லை.

தமிழர்கள் என்றுமே தலைநிமிர்ந்து வாழ்ந்தவர்கள் என்கிற உணர்வு நம்மிடையே வரவேண்டும். நம்மிடம் எல்லா வளமும் உள்ளது. நமது தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை மீட்டெடுக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Response