ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க ஆதரவு கொடுத்த சோனியாவுக்கு கறுப்புக்கொடி – மாணவர்கள் அறிவிப்பு

திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் சென்னை தீவுத்திடலில் மே 5 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

ஈழத்தில் எம் உறவுகளை கொல்வதற்காக ஆயுதமும், ஆதரவும் தந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கறுப்பு கொடியேந்தி போராடவுள்ளதாக தமிழக மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சென்னை பெருநகரக் காவல் ஆணையரை சந்தித்தபின் மாணவர்கள் உறுதிமொழி எடுத்ததுடன், போராட்டம் தொடர்பான விபரங்கள் நாளை காலை அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்

இவ்விடயம் தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

தனது இரத்தக்கறை படிந்த கைகளோடு சோனியா காந்தி எதிர்வரும் 5ம் திகதி சென்னை தீவுத்திடலில் நடக்கவிருக்கின்ற சட்ட மன்றத் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது மாணவர்கள் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்திற்கு அனுமதி பெறுவதற்காக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம்.

எனினும், தமது கோரிக்கையினை பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் சரியான இடத்தை காட்டினால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இல்லையேல் சோனியா காந்தி வரும் வழியில் நின்று கறுப்புக்கொடி காட்டுவோம் என மாணவர்கள் உறுதி எடுத்திருக்கின்றனர்.

எனவே, அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்வதோடு உணர்வுள்ள தமிழர்களும் கூட்டம் கூட்டமாக கலந்து கொள்ளும்படி உரிமையோடு அழைப்பு விடுக்கின்றோம் என தமிழக மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை. போராட்டம் குறித்த மேலதிக விடயங்களை நாளை காலை எமது முகநூலில் (vagowthamandir) அறிவிக்கப்படும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Response