ஜெயலலிதாவை நம்பினால் இப்படித்தான் – வேல்முருகனுக்கு எதிராகக் கருத்து சொல்லும் மக்கள்

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

கடலூரில் ஏப்ரல் 18 திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். நெய்வேலி தொகுதியில் வேல்முருகன் போட்டியிடுகிறார்.

அவர் மேலும் கூறும்போது, “சமரசமின்றி போராடுபவர்கள் தேர்தலில் மக்கள் ஆதரிக்க வேண்டும். சமரசம் செய்து கொள்ளாததால் சிறிய கட்சிகளை பெரிய கட்சிகள் புறந்தள்ளுகின்றன” என்றார்.

முன்னதாக, கடந்த 4-ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவிலை.

இது குறித்து அப்போது வேல்முருகன், “இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும், தொகுதிகளை இன்னும் குறைக்க வேண்டும்’ என்று என்னிடம் கூறியிருந்தால் மாவட்ட செயலாளர்களிடம் பேசி ஏற்றுக் கொண்டிருப்பேன். எதையும் கூறாமல் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே பட்டியலை வெளியிட்டனர்” என வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்முருகனின் இந்த அறிவிப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பொதுமக்கள் அவருக்கு எதிராகவே கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் ஒரு சில….

மனசாட்சிகளை எல்லாம் ஓர் ஓரமாக வைத்துவிட்டு ஆட்சியாளர்கள் செய்யும் அநியாயங்களுக்கும் வக்காலத்து வாங்கி வருபவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும். தான் வாழும் உரிமையையே அடகு வைப்பவர்கள், “தமிழக வாழ்வுரிமை” என கட்சிக்கு பெயர் வைக்கிறார்கள். இவர்களுக்கு பின்னாலும் ஒரு கூட்டம்.
சொந்த கட்சிகாரர்களை விட அம்மா என்று அதிகமாக கூவியவர் இவர்தான் இப்ப தனியாக நிற்கிறாராம் பாவம் உடம்பில் தெம்பும் இருக்காது என்ன செய்வது ஜெயலலிதாவை நம்பினிர் இப்போது கவலைக்கிடமாக ஆக்கிவிட்டார் இனி எழந்திருக்கமுடியாது

Leave a Response