திரிஷாவை திட்டுவதில் நியாயமில்லை – கவிஞர் சல்மா கோபம்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) மே 30 சனிக்கிழமை அதிகாலை சென்னையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் கூறப்படுகிறது.அவருடைய மறைவுக்கு திரையுலகினரும்,இரசிகர்களும்,அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்குமாரின் தாயார் மறைந்த செய்தியை அறிந்ததும்,தமிழக முதல்வர் விஜய்,சென்னையில் உள்ள அஜித்தின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தினார்.மறைந்த மோகினி மணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்,அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

விஜய் அங்கு போகும்போது அவருடன் நடிகை திரிஷாவும் சென்றது சர்ச்சையாகியிருக்கிறது.இதனால் நடிகை திரிஷாவை விஜய் கட்சியினர் கடுமையாகத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக கவிஞர் சல்மா வெளியிட்டுள்ள பதிவில்…

முதல்வர் விஜய் த்ரிசாவுடன் கான்வாயில் சென்று அஜித் அம்மாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறார். அவரது இரசிகர்கள் தங்கள் தலைவனை விமர்சிப்பதற்குப் பதிலாக த்ரிசாவைக் கடுமையாகத் திட்டி பதிவு செய்கிறார்கள்.அவர்களது அண்ணன் முதல்வரிடம் கேட்கவேண்டிய கேள்வியை அவரது அழைப்பின்பேரில் வந்த பெண்ணைத் திட்டுவது என்ன நியாயம்.பெண் என்றால் எதுவும் பேசலாம் என்கிற மனநிலை அபாயகரமானது. விஜயின் மனைவி சங்கீதாவையும் இப்படித்தான் அந்தக்கூட்டம் பேசியது.தவறு யார்மீது என பகுத்தறியாதவர்கள் சமூகத்தின் கேடு.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response