விவசாயியை அடித்து உதைக்கும் நாட்டில் 30 ஆயிரம் கோடி வாராக்கடன் – அதிரவைக்கும் புள்ளிவிவரம்

வங்கிகளிடம் மோசடி ஆசாமிகள் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததன் மூலம், வங்கிகளுக்கு நான்கு ஆண்டுகளில் ரூ.30,873 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மல்லையாவுக்கு வழங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடிக்கு மேல் போய்விட்டது. இதை வசூலிக்க முடியாமல் வங்கிகள் திணறுகின்றன.

இது ஒருபுறம் இருக்க, பல்வேறு வங்கிகளில் வழங்கப்பட்ட கடன்களில் பல இன்னும் வசூலிக்கப்படாமலேயே உள்ளன.

இப்படி பொதுத்துறை வங்கிகள் உட்பட 26 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி நிலுவையில் இருக்கின்றன.

உதாரணமாக, கடந்த 2011-12 நிதியாண்டு முதல் 2014-15 நிதியாண்டு வரை மேற்கண்ட வங்கிகள் வழங்கிய கடன் தொகை நிலுவை குறித்து நிதியமைச்சகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டு வராத கடன் தொகை மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட வங்கிகளுக்கு மொத்தம் ரூ.30,873.86 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Leave a Response