புயல் மற்றும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – தநாவுக்கு மழை எச்சரிக்கை

வங்​கக் கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்தத் தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக வலுப்​பெறும் நிலை​யில் சென்னை உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது.

இதுதொடர்​பாக வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு….

தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்தத் தாழ்வு மண்​டலம், ஆழ்ந்த காற்​றழுத்தத் தாழ்வு
மண்​டல​மாக வலுப்​பெற்​றுள்​ளது. இது சென்​னையி​லிருந்து கிழக்கு – தென்​கிழக்கே 780 கி.மீ. தொலை​விலும்,
காக்​கி​நா​டா​விலிருந்து தென்​கிழக்கே 830 கி.மீ. தொலை​விலும் நிலை​கொண்​டுள்​ளது.

இது இன்று (அக்​டோபர் 27) தென்​மேற்கு மற்​றும் அதையொட்​டிய மத்​தியமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் புய​லாக வலு​வடைந்​து, நாளைதீவிரப் புய​லாக வலுப்​பெறக்​கூடும்.

பின்​னர் ஆந்​திர கடலோரப்பகு​தி​களில், குறிப்​பாக மசூலிப்​பட்​டினம்​-கலிங்​கப்​பட்​டினத்​துக்கு இடையே
காக்​கி​நா​டாவுக்கு அரு​கில் தீவிரப்​புய​லாக கரையைக் கடக்​கக்​கூடும். அப்​போது காற்​றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 110 கி.மீ. வேகத்​தி​லும் வீசக்​கூடும்.

மத்​திய கிழக்கு அரபிக் கடலில் ஒரு காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் நிலவி வரு​கிறது.அதன் காரண​மாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்​களி​லும், புதுவை மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும்,நாளை வடதமிழ்நாட்டில் சில
இடங்​களி​லும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய இலேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். வரும் 29 முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை ஓரிரு இடங்​களில் இலேசானது முதல்
மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

தமிழ்நாட்டில் இன்று சென்​னை, திரு​வள்​ளூர், இராணிப்​பேட்​டை, காஞ்​சிபுரம் மாவட்டங்​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புது​வை​யிலும் கனமழையும் பெய்ய வாய்ப்​புள்​ளது.

நாளை திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும் சென்​னை, செங்​கை, காஞ்​சி், இராணிப்​பேட்​டை,தென்​காசி, கன்​னி​யாகுமரி மற்​றும் திருநெல்​வேலி மாவட்​டத்​தின் மலை பகு​தி​களில் ஓரிரு
இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response