மாநாடு எப்படி நடத்தவேண்டுமென நான் காட்டுகிறேன் – விஜய்யை சிதறடித்த சீமான்

மதுரை ஆனையூரில் தமிழர் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்ட சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அணில் ஏன் அங்கிள் அங்கிள் என கத்துகிறது? அது ஜங்கிள் ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும்.தவெக மாநாட்டில் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டது, இவ்வளவு பாதுகாப்போடு விஜய் வருவது குறித்து நான் பேச வரவில்லை. நான் ஒரு பெரிய கூட்டத்தோடு வருவதில்லை. நீங்கள் யாரைப் பாதுகாக்க அரசியலுக்கு வந்துள்ளீர்கள்? வேற ஏதாவது நாட்டிற்குச் செல்கிறீர்களா? ஓட்டு கேட்கும்போது இப்படி பாதுகாப்புடன் வர முடியாது. ஆரத்தித் தட்டுடன் வரும் என் பாட்டியைத் தடுக்க முடியாதே? பதவிக்கு வந்துவிட்டால் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

தவெகவால் நாதகவிற்கு ஒரு ஓட்டு கூட விழுகாது என்பது சரியல்ல. நானே உழுது விதைத்து நல்ல நெல்மணிகளை அறுவடை செய்து வருகிறேன். பிப்ரவரி 7 ஆம் தேதி நான் திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்துகிறேன். யார் கூட்டம் பெரியது எனப் பார்ப்போம். அன்றைக்கு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என இந்திய நிலத்திற்கு ஒரு படிப்பினையைக் கொடுக்க இருக்கிறேன். ஒரு மாநாட்டில் எப்படி உரை நிகழ்த்த வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அந்த மாநாட்டை நடத்திக் காட்டுவேன்.எப்போதும் இல்லாமல் இப்போது தேர்தல் நெருங்குவதால் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லி இருக்கலாம்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

நடிகர் விஜய்யை நேரடியாக சீமான் தாக்கிப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response