பாஜக அழைப்பு ஓபிஎஸ் நிராகரிப்பு – ஏன் தெரியுமா?

2026 தமிழ்நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான வியூ​கம், கூட்​ட​ணி, கட்​சிப் பணி​கள் குறித்து பாஜக மாநில நிர்​வாகி​களு​டன் தலை​வர்​கள் முக்​கிய ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டனர். தமிழ்நாடு பாஜக சார்​பில் மாநில அமைப்பு செயல்பாட்டுப் பயிற்சி முகாம் சென்னை​யில் நேற்று நடந்​தது.

இதற்கு அக்கட்சியின் தேசிய பொதுச்செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் தலைமை தாங்​கி​னார்.தமிழ்நாடு தலை​வர்
நயி​னார் நாகேந்​திரன்,ஒன்றிய இணைஅமைச்​சர் எல்​.​முரு​கன், மேலிடப் பொறுப்​பாளர் அரவிந்த் மேனன்,
முன்​னாள் தமிழ்நாடு தலை​வர்​கள் பொன்​.​இராதாகிருஷ்ணன், தமிழிசை, அண்​ணா​மலை, தேசிய செயற்​குழு
உறுப்​பினர் எச்​.​ராஜா, தேசிய மகளிர் அணித் தலை​வர் வானதி சீனி​வாசன் உட்பட புதி​தாக நியமிக்​கப்​பட்ட மாநில நிர்​வாகி​கள், மாவட்ட தலை​வர்​கள் என 100-க்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்டனர்.

இதில் சட்​டப்​பேரவைத் தேர்​தல் வியூ​கம், கூட்​ட​ணி, களப்​பணி தொடர்​பான பல்​வேறு ஆலோ​சனை​களை
தலை​வர்​கள் வழங்​கினர். அதி​முக – பாஜக கூட்​ட​ணியைப் பலப்​படுத்​து​வது, தோழமைக் கட்​சிகளான பாமக,
தேமு​தி​கவை கூட்​ட​ணி​யில் நீடிக்க செய்​வதற்கான அணுகு​முறை​கள், சமூக ஊடகங்​களை திறம்பட எவ்​வாறு பயன்​படுத்துவது, ஒன்றிய அரசின் திட்​டங்​களை மக்​களிடம் கொண்டு செல்​வது என்​பது உள்​ளிட்ட வழி​காட்​டு​தல்​களை வழங்​கினர்.

மேலும், கடந்த காலக் கசப்​பு​களை மறந்து அதி​முக – பாஜக கூட்​ட​ணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல உழைக்க வேண்​டும் என்​று நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் பேசும்​போது, கூட்​ட​ணி​யில் இருந்து பிரிந்து சென்​றவர்​கள் (ஓபிஎஸ்) மீண்​டும் நம் கூட்​ட​ணி​யில் இணை​வார்​கள். விரை​வில் தமிழ்நாடு வரும் பிரதமர் அதனைச் செய்து காட்​டு​வார் என அவர் பேசி​ய​தாக கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே பி.எல்​.சந்​தோஷ் – ஓபிஎஸ் சந்​திப்​புக்கு பாஜக தரப்​பில் முயற்சி மேற்​கொள்​ளப்​பட்​டது. இதற்​காக அவருடன் பாஜகவினர் தொலைபேசி​யில் பேசி​யிருந்​தனர். ஆனால், ஓபிஎஸ் தனது ஆதர​வாளர்​களு​டன் பேசி
முடி​வெடுப்​ப​தாகக் கூறியிருந்தார்.

இந்​நிலை​யில் நேற்று அவர்​களது சந்​திப்பு எது​வும் நடக்​க​வில்​லை.அதற்குக் காரணம், அமித்ஷாவையும் மோடியையும் சந்திக்க நேரம் கேட்டும் கொடுக்கவில்லை என்பதால்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம்.இப்போது பி.எல்.சந்தோசை சந்திக்க அழைப்பு விடுக்கின்றனர்.இதை ஏற்கக் கூடாது என்பது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது.

இந்தத் தகவல் பி.எல்.சந்தோசுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் அதற்கு,ஆகஸ்ட் 26 ஆம் தேதி மோடி தமிழ்நாடு
வரும்​போது ஓபிஎஸ்ஸை சந்​திக்க வைப்போம் என்று அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

எப்படியாவது ஓபிஎஸை, மீண்​டும் கூட்​ட​ணி​யில் இணைக்க முயற்​சிகள் நடை​பெற்​று
வரு​வ​தாகவும் பாஜக நிர்​வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Response