வடமாநிலத்தில் மேலும் 5 தொகுதிகள் இல்லை – பாஜக அதிர்ச்சி

2019, ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துப் பிரிவான 370 ஆம் பிரிவை ஒன்றிய அரசு நீக்கியது. அதோடு அனைவரும் அதிரும் வண்ணம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. அதே ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியன யூனியன் பிரதேசங்களாக மாறியது.

இதைத் தொடக்கம் முதலே அம்மாநில மக்கள் எதிர்த்து வந்தனர்.

பிப்ரவரி 3 ஆம் தேதியன்று, மீண்டும் மாநில அந்தஸ்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லடாக் மக்கள் போராட்டம் மேற்கொண்டனர். அங்கு முழு அடைப்பும் நடைபெற்றது. கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகவும் சென்றனர்.

அரசியலமைப்புப் பாதுகாப்பு, கலாச்சார அடையாளம், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மீண்டும் மாநில அந்தஸ்து ஆகியவற்றைக் வலியுறுத்தி இலட்சக்க்கணக்கான மக்கள் லே நகரில் கூடி போராட்டம் மேற்கொண்டனர். லே அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது.

இந்தப் போராட்டம் மற்றும் பேரணிக்காட்சிகள் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் பாஜகவுக்கு எதிராக ஒன்று கூடி ஒரேகுரலில் பேசுகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வெளிப்பட்டிருக்கும் இவ்வுணர்வு தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் ஐந்து பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன.கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் பாஜக வென்ற்அது.

இப்போது பாஜக மீது கொண்டுள்ள வெறுப்பு காரணமாக வரும் தேர்தலில் அங்கு ஒரு தொகுதியில் கூட பாஜகவோ அதன் கூட்டணிக்கட்சிகளோ வெல்லமுடியாது என்கிறார்கள்.

ஏற்கெனவே, பீகாரில் கடைசிநேர ஆட்சி மாற்றம் காரணாமாக அங்குள்ள 40 தொகுதிகள், ஜார்கண்ட் முதலமைச்சரைக் கைது செய்ததால் அங்குள்ள ஆறு தொகுதிகளை இழந்த பாஜக,ஜம்மு காஷ்மீரில் உள்ள ஐந்து தொகுதிகளையும் இழக்கும் என்றும் லடாக் மக்கள் போராட்டம் அதைத்தான் சொல்கிறது என்றும் அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response