பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் நினைவுநாள் – திருமாவளவன் வீரவணக்கம்

சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர்.

தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார்.

தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியைசாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துஇந்தியாவில் ஆயதப் பயற்சி பெற்றார்.

1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் அரசியற் தலைவரானார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் தரத்துக்கு அவர் நிலையுயர்த்தப்பட்டுள்ளார்.

1987 இல் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத் தளபதியாகவும் செயற்பட்டார்.1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2007 நவம்பர் 2 ஆம் நாள் சிங்கள வான்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பகிரங்க முகமாக செயற்பட்டு இராணுவ இயக்கமாக இருந்த புலிகள் இயக்கத்தில் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தி வந்தார். புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.

அவருடைய நினைவுநாள் இன்று.

அதையொட்டி, விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழீழ விடுதலைக்காகக் களமாடிய விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவு தலைவர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுநாள் இன்று.

சிங்கள பவுத்த பேரினவாதத்தாலும் இந்திய அரசின் துரோகத்தாலும் படுகொலை செய்யப்பட்ட இந்த நினைவுநாளில் வீரவணக்க நிகழ்வை விடுதலைச் சிறுத்தைகள் ஒழுங்குபடுத்தியிருக்கிறோம். விடுதலைச்சிறுத்தைகளின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் தமிழ்த்தேசியப்பெருந்தலைவர் தொல்.திருமாவளவன் மலர்தூவி வீரவணக்கம் செலுத்துகிறார்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response